புதுமைப்பித்தனின் புத்தகங்கள்

    புதுமைப்பித்தனின் புத்தகங்கள்.


  1. சாப விமோசனம்
  2. பால்வண்ணம் பிள்ளை
  3. ஞானக்குகை
  4. உபதேசம்
  5. அன்று இரவு
  6. வாடாமல்லிகை
  7. கருச்சிதைவு
  8. ஒருநாள் கழிந்தது
  9. பொன்னகரம்
  10. நினைவு ப் பாதை
  11. நியாயம்
  12. சிற்பியின் நகரம்
  13. காஞ்சனை
  14. வார்ப்புரு:கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
  15. சாமியாரும் குழந்தையும் சீடையும்











































புதுமைப்பித்தன் எழுதிய சில சிறுகதைகள்: சாப விமோசனம், பால்வண்ணம் பிள்ளை, ழ, ஞானக்குகை, உபதேசம், அன்று இரவு, வாடாமல்லிகை, கருச்சிதைவு. புதுமைப்பித்தன், தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான புகழ் பெற்றவர். புதுமைப்பித்தன் 1933 முதல் 1946 வரையிலான 12 ஆண்டுகளே எழுத்துப் பணியில் இருந்தார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களைப் பற்றி மட்டுமே இலக்கியம் எழுத வேண்டும் என்று அதுவரை இருந்து வந்த நிலைமையை மாற்றித் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும் தம் கதைகளில் படைத்துக் காட்டியுள்ளார். மேலும் அவர் மக்களிடமிருந்து தூர விலகி நின்று கதை சொல்லாமல் மக்களோடு ஒட்டி நின்றே தம் கதைகளைப் படைத்துள்ளார். புதுமைப்பித்தன் தம் கதைகளைப் பற்றி, “பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் செய்து உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்கு சௌகரியம் பண்ணி வைத்திருக்கும் இன்ஷுரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும், பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன்.......” என்றும், “இந்தக் கதைகள் யாவும் கலை உத்தாரணத்திற்கு என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலையை எருவிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ எனக்கோ, என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது” என்றும், "நான் கேட்டது, கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள்தாம் இவை. ......... தவிரவும் பழைய கதைகளை எடுத்துக்கொண்டு அதை இஷ்டமான கோணங்களில் எல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு” என்றும் கூறியுள்ளார். புதுமைப்பித்தன் 98 கதைகளை எழுதியுள்ளார். அவர் மணிக்கொடியில் எழுதிய 29 கதைகளைப் புதுமைப்பித்தன் கதைகள் என்ற பெயரில் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டுள்ளது. ஆறுகதைகள், நாசகாரக் கும்பல், பக்த குசலோ என்ற அவரது பிற நூல்களையும் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலைமகள் பதிப்பகம் காஞ்சனை தொகுதியையும், ஸ்டார் பிரசுரம் ஆண்மை என்ற தொகுதியையும் வெளியிட்டன. ஐந்திணைப் பதிப்பகம் புதுமைப்பித்தனின் மொத்தச் சிறுகதைகளையும் வெளியிட்டது. அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் புதுமைப்பித்தனின் அனைத்துச் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளது. 3.2.1 கதைக் கரு புதுமைப்பித்தன் காதல், சாவு, வறுமை, காமம், பசி, பயம், சிறுமை, சீரழிவு, சோகம், குழப்பம், கொந்தளிப்பு, மந்திரம், புராணம் என்று பலவற்றைக் கதைக் கருவாக எடுத்துக் கொண்டுள்ளார். அவர் எடுத்தாண்ட கதைக் கருக்களை அடிப்படையாகக் கொண்டு அக்கதைகளை, தனிமனித உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதைகள் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள் சமுதாயச் சிக்கலை மையமிட்ட கதைகள் காதலைக் கருவாகக் கொண்டவை நகர வாழ்க்கையின் போலித் தன்மைகளை வெளிக்காட்டும் கதைகள் கேலி, கிண்டல் இவற்றைக் கருவாகக் கொண்டவை. பேய், பிசாசு, வேதாளம் இவற்றை மையமிட்ட கதைகள் வறுமையைக் கருவாகக் கொண்டவை. என்று வகைப்படுத்திக் காட்டியுள்ளார் கரு. முத்தையா. புதுமைப்பித்தன் கதைகளில், ‘கற்பு’ என்ற கருத்தாக்கத்தைப் பேசும் பொன்னகரமும், இராமன் கொடுத்த சாபவிமோசனத்தைத் தேவையில்லை என்று தூக்கியெறிந்து விட்டு மீண்டும் தன்னைக் கல்லாக்கிக் கொண்ட அகலிகையைப் பற்றிப் பேசும் சாபவிமோசனமும் பலரால் அதிகம் விமரிசிக்கப்பட்டவையாகும். பொன்னகரத்தில் வாழ்பவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள். ‘அது வேறு உலகம் ஐயா, அதன் தர்மமும் வேறு’ என்று அந்நகரை விவரிக்கும் புதுமைப்பித்தன், சொந்தமாகக் குதிரை வண்டி வைத்திருக்கும் முருகேசன், அவன் மனைவி அம்மாளு, முருகேசனின் தாயார், தம்பி, குதிரை ஆக ஐவர் உள்ள ஏழ்மைக் குடும்பத்தை அக்கதையில் காட்டியுள்ளார்.தமிழ்ச் சிறுகதைகளின் பிதாமகனாகக் கருதப்படும் இவர், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். இவரது இயற்பெயர் சொ. விருத்தாசலம். புதுமைப்பித்தனின் சிறுகதைகளை வெளியிட்டுள்ள பதிப்பகங்கள்: கலைமகள் பதிப்பகம், ஸ்டார் பிரசுரம், ஐந்திணைப் பதிப்பகம்.